ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:47 IST)

மகாத்மா காந்தி நினைவு தினம்..! காந்திக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் - தமிழக ஆளுநர்

gandhi governor
மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின்  நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அமைச்சர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
 
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சத்தியம், அகிம்சை, எளிமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது இலட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவை உருவாக்குகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டுள்ளார்.
 
stalin
இதனிடையே காந்தியின் நினைவு நாளை ஒட்டி, திமுக தலைமை அலுவலகத்தில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.