வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (20:21 IST)

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!

Vellore
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (85). கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார்.

இவர் மனைவி ராஜம்மாள் (75). இத்தம்பதியினர் இருவரும் திருமணம் ஆனதில் இருந்து இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு உமாபதி என்ற மகன்  உள்ளார்.

இந்த நிலையில்,  கட்டிட மேஸ்திரி முத்து  நேற்று இரவு உண்ட பின்பு உறங்கச் சென்றார். அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் வருத்தத்திலேயே இருந்த நிலையில்,  நேற்ரு காலை தன் கணவரின் உடல் அருகிலேயே கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தார். அப்போது உறவினர்கள் அவரை தூக்கியபோது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து,  உறவினர்களும் பொதுமக்களும் இணைந்து முத்து – ராஜம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர், ஒரே வாகனத்தில் அவர்களின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பேரணாம்பட்டு ஆயக்கார வீதியிலுள்ள சுடுகாட்டில் ஒரே அடக்கம் செய்யப்பட்டது.