செக் மோசடி!.. சகோதாரி அம்பிகா மீது காவல் நிலையத்தில் ராதா புகார்!...
80களில் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலருடனும் இவர்கள் இரண்டு பேருமே ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது.
சினிமாவில் நடிப்பது போக சென்னையில் இவர்களுக்கு சொந்தமான பல இடங்கள் இருக்கிறது. சினிமா சூட்டிங் நடக்கும் ஸ்டுடியோக்களும் சொந்தமாக இருக்கிறது. அதுபோக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஹோட்டல்களையும் இவர்கள் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்ததாக தனது சகோதரி அம்பிகா மீது அவரின் சகோதரி ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அம்பிகா விரைவில் சமூகவலைத்தளங்களில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.