ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதை பார்த்த நடிகை கஸ்தூரி: டுவிட்டரில் குறும்பு!
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதை பார்த்த நடிகை கஸ்தூரி: டுவிட்டரில் குறும்பு!
நடிகை கஸ்தூரி டுவிட்டரில் சமீப காலமாக படு ஆக்டிவாக செயல்படுகிறார். அரசியல் மற்றும் சமூக நிலவரங்கள் குறித்து அசராமல் பேசி வரும் நடிகை கஸ்தூரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கனவில் வந்து இட்லி சாப்பிட்டதாக குறும்பாக கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை நாங்கள் பார்த்தோம், நலமாக இருக்கிறார். அவர் இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் கூறிய அதிமுக அமைச்சர்கள் தற்போது அவர் இட்லி சாப்பிடவில்லை, நாங்கள் அவரை பார்க்கவில்லை, அப்போது பொய் சொன்னோம் என கூறுகின்றனர்.
ஓ ! பார்த்தேனே ! தியானம் பண்ணேன். கனவுல வந்து இட்லி சாப்பிட்டாங்க. எனக்கும் ஊட்டி விட்டாங்க. #Jayalalitha #mystery
— kasturi shankar (@KasthuriShankar) September 28, 2017
இந்நிலையில் நடிகை கஸ்தூரியிடம் ஒருவர் நீங்கள் ஜெயலலிதாவை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, ஓ! பார்த்தேனே! தியானம் பண்ணேன். கனவுல வந்து இட்லி சாப்பிட்டாங்க, எனக்கும் ஊட்டி விட்டாங்க என கூறியுள்ளார். மேலும் அதில் ஜெயலலிதா, மர்மம் என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
