1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (16:29 IST)

‘பொட்டை’ என்பது இதுவா?: நடிகை கஸ்தூரியின் அடடா விளக்கம்!

‘பொட்டை’ என்பது இதுவா?: நடிகை கஸ்தூரியின் அடடா விளக்கம்!

சிலர் ஆண்களை திட்டுவதற்கு பொட்டை என்ற வார்த்தையை பயன்படுத்துவர். இந்த பொட்டை என்ற வார்த்தையை நடிகை கஸ்தூரி ஒருவரை திட்ட பயன்படுத்திவிட்டு, அந்த வார்த்தைக்கான விளக்கத்தையும் டுவிட்டரில் அளித்துள்ளார்.


 
 
நடிகை கஸ்தூரி சமூக வலைதளமான டுவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்படுபவர். அவரது கருத்துக்கு எதிர்கருத்துக்களும் ஆதரவும் டுவிட்டரில் நிலவும். பொதுவாக சிலர் டுவிட்டரில் பிரபலங்களிடம் வம்பிழுத்து அவர்களை திட்டுவதும், பிரபலங்களும் திருப்பி அவர்களை திட்டுவது வழக்கமான ஒன்றுதான்.
 
இந்நிலையில் ஒரு டுவிட்டர் பயனாளி கஸ்தூரியை திட்டிவிட்டு அவரை டுவிட்டரில் பிளாக் செய்துவிட்டார். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த கஸ்தூரி அதனை டுவிட்டரில் போட்டு அவரை பொட்டை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மற்றொரு டுவிட்டர் பயனாளி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

 
நீங்கள் பதிலடி கொடுத்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களுக்கு பொட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியும் என்று நம்புகிறேன். ஒரு பெண்ணாக இருந்து ஏன் பெண்மையை தாழ்த்துகிறீர்கள்? உங்கள் பெண்ணுரிமைக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பியிருந்தார் அந்த டுவிட்டர் பயனாளி.
 
இதற்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி, பொட்டை என்றால் பெண் மட்டுமல்ல. வெற்று (பொட்டை கண்) எதுவுமே வளராதது (பொட்டைக்காடு), ஆண்மையற்ற (impotent) என்றும் பொருள் என கூறினார்.