வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:25 IST)

திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால்? - எடப்பாடியின் அதிரடி திட்டம்

திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டாடு ராஜினாமா செய்தால் அதை எப்படி சமாளிப்பது என முதல்வர் எடப்பாடி தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.


 

 
தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை அடுத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ள எடப்பாடி அரசு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்து விட்டு,  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தை திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுகவின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடையும் பட்சத்தில், கடைசி ஆயுதமாக, அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் மொத்தமாக ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது.


 

 
ஆனால், திமுக அந்த நிலை எடுத்தால் அதை எப்படி சமாளிப்பது என நேற்று இரவே எடப்பாடி பழனிச்சாமி, முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை செய்துவிட்டதாக தெரிகிறது.
 
அதாவது, மு.க.ஸ்டாலின் அந்த முடிவை எடுக்க மாட்டார். ஒருவேளை அப்படி நடந்தாலும், அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் வராது. எதிர்கட்சி என்ற ஒன்றே இல்லாமல் ஆட்சி செயல்படும். அதேபோல், ஏற்கனவே காலியான 19 தொகுதியோடு சேர்த்து, இந்த 98 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திவிடலாம் என பழனிச்சாமி கூறினாராம். 
 
அதோடு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கே சாதமாக அமையும். தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றாலும், அந்த வழக்கில் தீர்ப்பு வர சில மாதங்கள் ஆகும். எனவே, அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரம் எடப்பாடி.