1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actress jayalakshmi get bail

நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும்' .. ஒரே நாளில் ஜாமினில் வெளிவந்த ஜெயலட்சுமி..!

சினேகன்
சினேகன் பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்ததாக நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் ஜாமீன் வாங்கி அவர் விடுதலை ஆகியுள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும் என்றும் பதிவு செய்துள்ளார் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

கவிஞர் சினேகன் ’சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வரும் நிலையில் அந்த பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி விசாரணை செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் மறுநாளே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதை அடுத்து வீட்டுக்கு திரும்பிய ஜெயலட்சுமி நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அதிமுக பாமக கூட்டணி முடிவுக்கு வருமா...? இபிஎஸ் உடன் பாமக எம்எல்ஏக்கள் சந்திப்பு.!!