திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:39 IST)

சென்னையில் 500 இடங்களில் இலவச வைபை வசதி: தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சென்னையில் 500 இடங்களில் இலவச வைபை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 
 
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஏற்பாடு செய்த தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று சென்னை வர்த்தகம் மையத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் அதன் ஒரு பகுதியாக  சென்னையின் 500 இடங்களில் இலவச வைபை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார் 
 
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இலவச வைபை வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைபை சேவைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva