செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (10:15 IST)

மீண்டும் சூடுபிடிக்கும் ஆனந்தியின் மார்க்கெட்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்திருந்த ஆனந்தியிடம், தற்போது 5 படங்கள் இருக்கின்றன.
 
 
‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆனந்தி, ‘பண்டிகை’, ‘ரூபாய்’, ‘மன்னர் வகையறா’,  ‘பரியேறும் பெருமாள்’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ என தற்போது 5 படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.  ‘பண்டிகை’ படத்தில் கிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி, இதுவரை நடித்த சாஃப்ட் கேரக்டர்களில் இருந்து விலகி, கொஞ்சம் போல்டான பெண்ணாக நடித்திருக்கிறாராம்.
 
மேக்கப் இல்லாமல் பெட்ரூமை விட்டுக்கூட வெளியில் வராத நடிகைகளுக்கு மத்தியில், ஆனந்திக்கு மேக்கப் போடவே பிடிக்காதாம். குடும்ப விழாக்களுக்குச் சென்றால் கூட மேக்கப் போட்டுக்கொள்ள மாட்டாராம். “இயல்பாகவே என் முகம் அழகாக இருக்கிறது. அதை ஏன் நான் கெடுத்துக்கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார் ஆனந்தி.