ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:15 IST)

திரைத்துறை அமைப்புகளுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்

சிறு பட்ஜெட் படங்களுக்காக திரைத்துறை அமைப்புகளிடம் நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலாபிரபு இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘இந்திரஜித்’. கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், சோனாரிகா மற்றும் அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத்  தயாரித்திருந்தார்.
 
இந்தத் திரைப்படம், குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகமாக வெளியிடப்பட்டது. சென்னையில் நேற்று நடந்த புத்தக விழாவில், நடிகர் விவேக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர், “பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும்போது சிறிய பட்ஜெட் படங்களும் ரிலீஸாகி தோல்வியடைவதைத் தடுக்க வேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள் குறைந்தது இரண்டு  வாரங்களாவது ஓடும் அளவிற்கு திரைத்துறை அமைப்புகள் இணைந்து பட வெளியீட்டை முறைப்படுத்த வேண்டும்” எனத்  தெரிவித்தார்.