செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (15:57 IST)

இராமாயணத்தில் சகுனியா? காமெடியாகி போன செந்திலின் சீரியஸ் பேச்சு

இராமாயணத்தில் இருப்பது போல் இங்கு இருப்பவர்கள் அனைவரும் சகுனிதான் என நடிகர் செந்தில் கூறியுள்ளார். 


 

 
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் நடிகர் செந்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
சசிகலாதான் பொதுச் செயலாளர். முதல்வர் பழனிச்சாமி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால் முதல்வராக ஏற்றுக்கொள்கிறோம் என்றார். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியினரை தாக்கிய பேசிய செந்தில், இராமாயணத்தில் இருப்பது ஒரு சகுனிதான். ஆனால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் சகுனிதான் என்றார். 
 
செந்தில் சீரியஸாக கூறிய சகுனி கதை சற்று கமெடியாக மாறிவிட்டது. தினகரன் அதிமுக நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை செந்தில் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.