ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (16:34 IST)

நடிகர் சங்க கட்டிடம்.! ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய நெப்போலியன்..!

Nepolian
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்தப் பணிகள் முழுமை பெற ரூ.40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், 2000 - 2006-ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உப தலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்து கூறி, நன்றி தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.