ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (10:54 IST)

உதகையை அடுத்து ஈரோட்டிலும் சிசிடிவி பழுது: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் இந்நாள் மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் போட்டியிடும் நீலகிரி தொகுதியில் சமீபத்தில் சில மணி நேரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங்ரூமில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து சிசிடிவி இயங்கவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
உதகையில் ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பழுதான பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் தற்போது ஈரோடு பகுதியிலும் ஸ்ட்ராங்ரூமில் சிசிடிவியில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
ஈரோடு பகுதியில் உள்ள ஸ்ட்ராங்ரூமில் 200க்கும் அதிகமான  சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு சிசிடிவி மட்டும் பழுதானது என்றும் அதுவும் ஒரு மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை வரவழைத்து பழுது செய்து சரிபார்க்கப்பட்டது என்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அனைத்து சிசிடிவிகளையும் அரசியல் கட்சியினர் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். உதகை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங்ரூமில் சிசிடிவி பழுதானது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran