வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (16:00 IST)

பிரதமர் மோடிக்கு எதிரான மனு..! டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி..!

Modi
வெறுப்பு பேச்சு காரணமாக பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்க கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 
அண்மையில் ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. மோடியின் இந்த பிரசாரத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. 
 
மதம் சார்ந்து பிரசாரம் மேற்கொள்ளும் மோடிக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 
இந்நிலையில் இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்பதால் இந்த மனு முற்றிலும் தவறான கூறி பிரதமருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.