வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (12:46 IST)

ஆண்டாள் சர்ச்சை ; நித்யானந்தாவிற்கு எதிராக பொங்கியெழுந்த பிரசன்னா

ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.  

 
தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
குறிப்பாக, நித்யானந்தாவின் பெண் சீடர்கள் சமூக வலைத்தளங்களில் வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டனர். வைரமுத்து மீது பல வழக்குகளும் தொடரப்பட்டது. ஆனால், மற்றவர் எழுதியதை வைரமுத்து மேற்கோள்தான் காட்டியுள்ளார். எனவே, அவர் மேல் தவறில்லை என நீதிமன்றமும் கூறிவிட்டது.
 
அந்நிலையில், கவிஞர் வைரமுத்து ஒரு வீடியோ வெளியிட்டு, அதில், ஆண்டாள் பற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். ஆனாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
 
இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் “ உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு” என கோபமாக பதிவு செய்துள்ளார்.