மதன் கார்க்கி எந்த பொண்டாட்டிக்கு பொறந்தார்? நித்தியானந்தாவின் சிஷ்யையின் அருவருப்பான வீடியோ
சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறிய வைரமுத்துவுக்கு கண்டனங்கள் பெருகி வரும் நிலையில் அவர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
வைரமுத்து கூறிய கருத்துக்கு அவரை மன்னிப்பு கேட்க கூறுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவரை ஒருசிலர் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்து வருவது தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
குறிப்பாக ஃபேஸ்புக்கில் நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தரம் தாழ்ந்த விமர்சனத்தின் உச்சக்கட்டமாக உள்ளது. மதன் கார்க்கி எந்த பொண்டாட்டிக்கு பொறந்தார், வைரமுத்து எந்த அப்பா அம்மாவுக்கு பிறந்தார் என்பது உள்பட பல அருவருக்கத்தக்க கருத்துக்கள் இந்த வீடியோவில் உள்ளதை பலர் அருவருப்பாக பார்க்கின்றனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.