செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (10:44 IST)

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் எனது பார்வையில் இந்துக்கள் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தை தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக, குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கையின் மாநாடு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசியவதாவது:
 
நான் காங்கிரஸ் அரசிடமிருந்து கர்நாடகாவில் நிலத்தை வாங்கினேன் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில், எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியாது. 
 
மேலும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என என் மீது குற்றம் சாட்டுகின்றனர். நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. நான் பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெக்டே ஆகியோருக்கு எதிரானவன். என்னை பொறுத்தவரையில் அவர்கள் இந்துக்கள் அல்ல” என பரபரப்பாக பேசினார்.
 
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும் என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “ இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில், யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.