திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2018 (23:20 IST)

மாயமான தொகாடியாவை ஒருசில மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

விஸ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அவரை கண்டுபிடிக்க 4 தனிப்படைகளை குஜராத் போலீசார் அமைத்தனர். இந்த தனிப்படைகள் ஒருசில மணி நேரத்தில் பிரவீன் தொகாடியாவை கண்டுபிடித்துவிட்டனர்

பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தற்போது சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மருத்துவமனை உள்ள பகுதி ஷாகிபாக் என்கிற இசுலாமியர்கள் மிகுந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது

62 வயதான தொகாடியா குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு மற்றும் இரத்தச் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக சுயநினைவிழந்ததாக சொல்லப்படுகிறது.  இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தொகாடியா திடீரென மாயமானது குறித்து குஜராத் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.