செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (19:16 IST)

தமிழகத்தின்‌ நிரந்தர முதல்வராக நீங்கள் தான் இருக்க வேண்டும்: பிரபல நடிகர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இன்று காலை முதல் பிரதமர் நரேந்திர மோடி முதல் நடிகர் கமல்ஹாசன் வரை பல தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறிய நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் தனது வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடியாருக்கு தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
 
யா வணக்கம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதாவின் நல்லாட்சியை தொடர்ந்து நடத்தி வரும்‌ நீங்கள்‌ தமிழக மக்களின்‌ மனதில்‌ நீங்காத இடம்‌ பிடித்துள்ளீர்கள்‌. அ.தி.மு.கவின்‌ தொண்டனாக தங்களின்‌
வாழ்க்கையை தொடங்கி பல பொறுப்புகளை வகித்துள்ளீர்கள்‌. குறிப்பாக நான்கு முறை சட்டமன்றத்திற்கும்‌ ஒரு முறை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யபட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளீர்கள்‌.
இன்று தமிழக முதல்வராக ஏழை எளிய மக்கள்‌ குறிப்பாக விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறீர்கள்‌. உங்களின்‌ இந்த பிறந்த நாளில்‌ என்றும்‌ தமிழகத்தின்‌ நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும்‌ என்று என்னுடைய ஜனசேனா கட்சியின்‌ சார்ப்பாக வாழ்த்துகிறேன்‌.இவ்வாறு நடிகர் பவன்கல்யாண் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவர்களை பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு  பவன்கல்யாண் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை உடனடியாக முதல்வர் பழனிச்சாமி நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பவன்கல்யாணின் இந்த வாழ்த்து செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது