பரதநாட்டியம் ஆடி அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாவனா - வீடியோ

Papiksha Joseph| Last Updated: சனி, 2 மே 2020 (15:53 IST)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா. இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.

சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அஜித்தின் பிறந்தாளுக்கு வித்யாசமாக வாழ்த்துக்கூற முயற்சித்த பாவனா, அஜித்தின் விவேகம் படத்தில் இடம் பெற்ற சர்வைவா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.


Happy Birthday to the Gentleman of Tamizh Cinema, #thalaajith ❤️ This song resonated with us considering what the world is going through currently. We need to believe, we need to fight and we need to SURVIVE this. Watch till the end as we tried to finish with a messageஇதில் மேலும் படிக்கவும் :