வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (13:21 IST)

அஜித் பிறந்த நாள் ஹேஷ்டேக்கை வேண்டுமென்றே தவறாக போட்டாரா சாந்தனு?

அஜித் பிறந்த நாள் ஹேஷ்டேக்
இன்று அஜித் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே சிறப்பு ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை உலக அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். #HBDDearestThalaAJITH என்ற இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் வைரலாகி உள்ளது.
 
இந்த நிலையில் இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும் நடிகரும், தளபதி விஜய்யின் தீவிர ரசிகருமான சாந்தனு இன்று காலை தனது டுவிட்டரில் அஜித்தின் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். விஜய்யின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போதுதான் அவர் #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலாக 
#HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு ஹேஷ்டேக்கும் ஒரே மாதிரி இருந்தாலும் Thala என்பதற்கு பதிலாக ThaIa என்று இருப்பது உற்றுநோக்கினால் மட்டுமே தெரிய வரும். தவறான ஹேஷ்டேக்கை இன்னொரு பக்கம் டிரெண்ட் ஆக்கினால் உண்மையான ஹேஷ்டேக்கின் டுவீட்டின் எண்ணிக்கை குறையும் என்று சாந்தனு வேண்டுமென்றே தவறான ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளதாக அஜித் ரசிகர்கள் கண்டுபிடித்து சாந்தனுவுக்கு தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சாந்தனு உண்மையிலேயே வேண்டுமென்று தவறான ஹேஷ்டேக்கை பதிவு செய்தாரா? அல்லது தெரியாமல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டாரா? என்பது அவரது மனட்சாட்சிக்கு மட்டுமே தெரிந்தது