வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (11:09 IST)

நாளை அஜித் பிறந்த நாள்: வலிமை படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வந்த ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா முழுவதுமாக ஒழிந்த பின்னரே இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அஜித் கறாராக கூறிவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கபடுகிறது
 
இந்த நிலையில் படம் வெளிவராவிட்டாலும் பரவால்லை குறைந்தபட்சம் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இந்த கோரிக்கைக்கு படத்தயாரிப்புக் குழுவினர் செவிசாய்க்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
கோவிட்‌ 19 என்னும்‌ கொரோனா என்கிற கொடிய நோயின்‌ தாக்கத்தில்‌, அகில உலகமே போராடிக்‌ கொண்டு இருக்கும்‌ இந்த தருணத்தில்‌ எங்கள்‌ நிறுவனம்‌ தயாரிக்கும்‌ எந்த படத்துக்கும்‌ எந்த விதமான விளம்பரமும்‌ செய்ய வேண்டாம்‌ என்று எங்கள்‌ நிறுவனத்தில்‌ பணியாற்றும்‌ நடிகர்‌, நடிகையர்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப கலைஞர்கள்‌ ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக்‌ கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம்‌ என்பதை தெரிவித்து கொள்கிறோம்‌. அதுவரை தனித்து இருப்போம்‌, நம்‌ நலம்‌ காப்போம்‌.
 
இந்த அறிக்கையால் அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.