1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (15:31 IST)

அந்த மாதிரி விளம்பரத்துல நடிச்சது தப்புதான்..! – மனம் வருந்திய லால்!

Lal
சினிமா உலகில் பிரபலமான துணை நடிகராக உள்ள லால் தான் ஒரு விளம்பரத்தில் நடித்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, மருதமலை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் லால். இவர் சமீபத்தில் வெளியான கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

சமீபத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் இவர் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோசடி செய்யும் ஆன்லைன் விளையாட்டின் விளம்பரத்தில் லால் நடித்திருப்பது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விளம்பரம் குறித்து பேசியுள்ள நடிகர் லால் “கொரோனா ஊரடங்கின்போது பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். அதனால்தான் அந்த ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதற்காக தற்போது வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.