1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (22:05 IST)

இயக்குனர் லிங்குசாமியிடம் மன்னிப்புக் கேட்ட ஹீரோ!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லிங்குசாமி. இவர் பையா, சண்டக்கோழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியில் நடிப்பில் தி வாரியார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் புரோமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதில். நடிகர் ராம் பொத்தினேனி பேசினார். அப்போது, இப்படத்தின் இயக்குனர் லிங்குசாமியைப் பற்றி பேச மறந்துவிட்டார். இதற்கு ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர். இந்த நிலையில், ராம் பொத்தினேனி, தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்து, லிங்குசாமியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.