1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (11:01 IST)

கொடைக்கானலில் காட்டுத்தீ – நடிகர் கார்த்தி விழிப்புணர்வு வீடியோ!

கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டு தொடர்ந்து பரவி வரும் நிலையில் இதுகுறித்து நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் மலைவாச சுற்றுலா தளமாக கொடைக்கானல் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெருமாள் மலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் காட்டுத்தீன் தொடர்ந்து பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காட்டுத்தீ குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி “காட்டுத்தீயைத் தவிர்க்கவும் அதை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.