1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 மார்ச் 2022 (09:26 IST)

சீசனுக்கே முன்பே அதிகரிக்கும் வெயில்! – இளநீர், தர்பூசணி வியாபாரம் மும்முரம்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்னதாகவே வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியை நெருங்கி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி கோடைக்காலம் நடைபெறும் நிலையில் முன்னதாகவே சேலத்தில் சராசரி வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. மார்ச் 2ம் வாரத்திலேயே வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளதால் அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பல மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்துள்ளதால் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவை அதிகளவில் விற்பனையாக தொடங்கியுள்ளன.