வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (19:47 IST)

''ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் ''- நடிகர் கமல்ஹாசன் டுவீட்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஒன்று கூடுவோம் வென்றுகாட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்து சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில், ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையில்  கமல்ஹாசன் தன் கட்சித்  தொண்டர்களுடன் கலந்து கொண்டார். அதனால் காங்கிரஸுடன் அவர் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மையம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளதாக கமலஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  கமல்ஹாசனுக்கு நன்றி கூறும் வகையில்,  ‘’ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளரான, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்துள்ள திரு கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி’’ என முதல்வர்  முக. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதற்கு கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் தமிழ் நாடு வாழ்க ‘’என்று தெரிவித்துள்ளார்.