வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:11 IST)

நடிகர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டு – கொந்தளித்த மைக் மோகன்

நடந்துவரும் நடிகர் சங்க தேர்தலில் பிரபல நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதால் தேர்தல் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு நடிக, நடிகையர்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மைக் மோகன் தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடி வந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் கொந்தளித்த மைக் மோகன் அதிகாரிகளுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.