1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (21:27 IST)

ஒலிம்பிக் வீராங்கனைக்கு உதவிய சசிக்குமார்!

தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு நடிகர் சசிக்குமார் உதவியது தெரியவந்துள்ளது.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மதம் 23 ஆம் முதல் ஆக்ஸ்ட் 8 ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
 
இதில், பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சுப் போட்டியில் பவானி தேவி தேர்வாகியுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 
 
இந்தியாவிலிருந்து இப்போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் பெண் இவர்தான்.
 
இதற்கு  நடிகர் சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒலிம்பிக்கில் வாள் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பவானி தேவிக்கு எனது வாழ்த்துகள் Feel #Proud n #Happy @IamBhavaniDevi #TokyoOlympics  எனப் பாராட்டியிருந்தார்.
 
இதை டேக் செய்து இரா.சரவணன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
 
6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி பவானிதேவி தடுமாறினார். 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார் @SasikumarDir ஒரு ஆட்டோவில் தன் தாயுடன் வந்து நன்றி சொன்ன பவானி, இன்று ஒலிம்பிக்கில்! போராடத் துணிந்தவர்களை ஏழ்மையால் தடுக்க முடியாது, சாட்சி பவானி! எனத் தெரிவித்துள்ளார்.