1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Active scooty robbery around tambaram

ஆக்டிவா ஸ்கூட்டியை திருடும் மர்ம நபர்கள்… தாம்பரம் பகுதியில் பீதி!

ஆக்டீவா
சென்னை தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆக்டிவா ஸ்கூட்டிகளை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் திருடி வருவது பீதியைக் கிளப்பியுள்ளது.

சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகளவில் ஸ்கூட்டிகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன. அதிலும் அந்த கும்பல் ஆக்டிவா ஸ்கூட்டிகளை மட்டுமே அதிகளவில் திருடுவதாக தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
அடுத்த கட்டுரையில்
அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி