செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (16:35 IST)

சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் தமிழ் மொழியில் அறிவிப்பு: அமைச்சர் தகவல்

தமிழகத்திற்கு வரும் விமானங்களில் முதலில் தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்கள் மத்தியில் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முதல் சென்னையில் தரை இறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல் அளித்துள்ளார் 
 
மத்திய அமைச்சர் ஹர்திப்சிங்கை இன்று சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்த சந்திப்புக்குப் பின்னர் இந்த தகவலை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் தரை இறங்கும் விமானத்தில் முதலில் ஆங்கிலம், அடுத்ததாக இந்தி அதனை அடுத்துதான் தமிழ் மொழியில் அறிவிப்பு இடம்பெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது
 
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் அவர்களுடன் இன்று அமைச்சர் பாண்டியராஜன் உரையாடினார். இந்த உரையாடலுக்கு பின்னர் பொங்கல் பண்டிகை முதல் சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் முதலில் தமிழில் தான் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.