திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (08:36 IST)

விஜய் எங்கள் பக்கம்; அரசியலுக்கு வரட்டும்... அதிமுக அமைச்சர் !

விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதை வரவேற்பதாக அதிமுக அமைச்சர் கருத்து.  
 
சமீபத்தில், திடீரென விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியானது. இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர், நான் பாஜகவில் இணைவது குறித்து யோசித்ததே இல்லை. நான் பாஜகவில் இணைய போவதாக எதற்காக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகிறார்கள் என்றும் தெரியவில்லை என கூறினார். 
 
அதோடு, விஜய் மக்கள் இயக்கம் என்பது தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் விஜய் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவிற்கு நேரடியாக ஆதரவு அளித்தவர். ஆனால் தற்போது அவரது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக நேரம் வரும் போது மாற்றுவேன் என அவரது தந்தை கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்றுதான் என பேசியுள்ளார்.