1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (12:32 IST)

சிம்புவின் அடுத்த பட டைட்டில் பர்ஸ்ட்லுக் இதுதான்

நடிகர் சிம்புவின் 46வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் சிம்பு சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’ஈஸ்வரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து ஈஸ்வரன் என்ற ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது 
சுசீந்திரன் இயக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நிதிஅகர்வால் நடித்து வருகிறார் என்பதும் தமன் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது 
 
மேலும் இந்த திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாய்மையை வாகை சூடும் என்றும் ஈஸ்வரனின் தாண்டவப்பொங்கல் திரையரங்குகளில்’ என்றும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
ஸ்லிம்மான உடல் அமைப்புடனும் ஸ்டைலான தாடியுடன் கையில் பாம்பை வைத்திருக்கும் சிம்புவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது