1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (10:37 IST)

7 மாதங்களில் 6000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? என்ன காரணம்??

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை மாதம் வரை, தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. எதனால்??

தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை நடைபெற்ற சாலை விபத்தில், மொத்தம் 7 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்ததாக ஒரு தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 6 ஆயிரத்து 522 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது போக்குவரத்து துறையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைவு என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொடுங்காய விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்த உயிரிழப்புகளில் மோட்டார் சைக்கிள்களால் 41 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களால் 27 சதவீதமும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது எனவும், 54 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாததால் தான் இறந்துள்ளனர் எனவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.