புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:40 IST)

அம்பேத்கர் சிலை உடைப்பு ...அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதற்கு  பல்வேறு  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான  கமல்ஹாசன் , சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.  இதனால் கோபம் அடைந்த ஒரு தரப்பினர், அந்தக் காரை தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர் ,தீயிட்டு கொளுத்திய மற்றொரு கும்பல் மீது ஆத்திமடைந்து பேருந்துநிலையத்தின் அருகே இருந்த அம்பேத்கார் சிலையை உடைத்தது. 
 
இதனையடுத்து வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் உருவானது. இங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாம்ல் இருக்க உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
 
பின்னர் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று காலையில் புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டது.
 
இந்நிலையில் அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஒடுக்கப்பட்ட சமூகமும் முன்னேற வேண்டிய சமூகமும் மோதிக்கொள்வது அரசியலை தொழிலாய் செய்பவர்களுக்கு தீனியாய் அமையுமே தவிர அது தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு வழியாகாது. சிலையை உடைத்த சமூக விரோதிகள்  மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.