புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:21 IST)

மற்றவர்கள் பற்றி கவலையில்லை - தனது முடிவை முகநுலில் முன்பே பதிவிட்ட அபிராமி

மற்றவர்கள் பற்றி கவலையில்லை - தனது முடிவை முகநுலில் முன்பே பதிவிட்ட அபிராமி
குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
விஷம் அருந்திய மகன், எங்கே உயிர் பிழைத்துவிடுவானே என்கிற பயத்தில் பெற்ற மகன் என்றும் பாராமல் அவனின் கழுத்தை நெறித்து அபிராமி கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபிராமி, மற்றும் சுந்தரத்தை கைது செய்த போலீசார் அவர்களை விரைவில் சிறையில் அடைக்க உள்ளனர்.
 
கடந்த 30ம் தேதி இரவே தனது கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளுக்கும் அபிராமி தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். ஆனால், மருந்தின் வீரியம் குறைவாக இருந்ததால் விஜய் மற்றும் மற்றும் மகன் அஜய் காலையில் எழுந்துவிட்டனர். அதன் பின்னர் மீண்டும் விஷம் கொடுத்து அவர் அஜயை கொலை செய்துள்ளார்.
மற்றவர்கள் பற்றி கவலையில்லை - தனது முடிவை முகநுலில் முன்பே பதிவிட்ட அபிராமி

 
இந்நிலையில், கடந்த 28ம் தேதி மாலை அபிராமி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் “மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி கவலையில்லை.  நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்” என்கிற ஒரு பதிவை அவர் இட்டுள்ளார். இது அவரின் மனநிலையை காட்டியுள்ளது.
 
அந்த பதிவுக்கு ஒரு நாள் கழித்து அதாவது 30ம் தேதி இரவுதான் அவர் தன் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.