ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (10:19 IST)

தமிழக அரசு பள்ளிகளில் அபாகஸ். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அபாகஸ் என்று கூறப்படும் கல்விமுறை தற்போது ஒருசில தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அபாகஸ் முறையினால் மாணவர்களின் ஐக்யூ என்று கூறப்படும் அறிவுத்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் விரைவில் அபாகஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் இந்த அபாகஸ் கல்விமுறை குறித்து உடனடியாக ஆய்வு செய்து வரும் டிசம்பர் முதல் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.