1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:40 IST)

நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் திடீர் சந்திப்பு

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர உள்ளது.  படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

 
இப்படம் வெளியாக இன்னும் மூன்று தினங்கள் உள்ளது. இந்நிலையில் படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற  கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று நடிகர் விஜய் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் இல்லத்திற்கு சென்று, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.