1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (08:46 IST)

ரம்ஜான் பண்டிகை … ஆவின் பால் கவரில் வாழ்த்து!

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து ஆவின் பால் கவர்களில் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. அதைத் தொட்டு இப்போது நோன்புக் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து 30 ஆவது நாள் பிறை தெரிந்த பின்னர் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் இன்று காலை ரம்ஜான் கொண்டாடப்ப்டும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயுப் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து பலரும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் நிறுவனமான ஆவின் இன்று தங்கள் பால் கவர்களில் ரம்ஜான் வாழ்த்துகளோடு பிறை தெரிவது போன்றும் அமைத்து இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.