திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (22:03 IST)

ஐரோப்பிய நாடுகளுக்கு பால் ஏற்றுமதி: அமைச்சர் நாசர் தகவல்!

ஐரோப்பிய நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மற்றும்  மேற்கத்திய நாடுகளுக்கு ஆவின்பால் ஏற்றுமதி செய்யப்படும் என அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை பூந்தமல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் ஆவின் பால் உற்பத்தி செய்யப்படும் 152 பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த ஆட்சியில் வெளிநாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது என்றும் அமைச்சர் நாசர்  தெரிவித்துள்ளார் 
 
தற்போது சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்