செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (15:05 IST)

ஆவின் நிறுவனத்தில் காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு!

ஆவின் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு வைத்து காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறி இருப்பதாவது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி,  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உதவியாளர் (கிரேடு-3) பதவி ஆகியவை குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வின் கீழும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்,  தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர்,  தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர்,  தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் இளநிலை உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூட்டிவ் (ஆபீஸ்),  ஜுனியர் எக்சிகியூட்டிவ் (தட்டச்சு)உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல்,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர்,  ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் (லேப்) உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின்கீழும், மாநிலபோக்குவரத்துக் கழகத்தில் உதவிமேலாளர் (சட்டம்),  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் (கிரேடு 3) – சட்டம் மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பணிகள் ஒருங்கிணைந்த சட்ட பணிகள் தேர்வின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுவரை,  பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் அந்தந்த நிறுவனங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva