திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (15:04 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.  

டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 262 ரன்களும், எடுத்தது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 264 ரன்கள் எடுத்த நிலையில் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் அந்த அணி 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ’

பாகிஸ்தான் அணியின் கடைசி 3 விக்கெட்டுகள் 3 பந்துகளில்  இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Edited by Siva