வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:52 IST)

'Khelo India Youth Games 2023' ஜனவரி 19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது- அமைச்சர் உதயநிதி

udhayanithi stalin
விளையாட்டுத்துறையில் கழக அரசு படைத்து வரும் சாதனைகளின் அடுத்த கட்டமாக, Khelo India Youth Games 2023 ஜனவரி 19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''விளையாட்டுத்துறையில் கழக அரசு படைத்து வரும் சாதனைகளின் அடுத்த கட்டமாக, Khelo India Youth Games 2023 ஜனவரி 19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்புக்குரிய போட்டிக்கான ஏற்பாடுகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை இன்று ஆய்வு செய்தோம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடகள ஓடுதளம் (Athletic Track) மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தோம். நாடெங்கிலிருந்தும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்கவுள்ள கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023, இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில் தமிழ்நாட்டுக்கென தனி இடத்தை உருவாக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்''என்று தெரிவித்துள்ளார்.