எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? தீயாய் பரவிய தகவலுக்கு ஸ்ருதிஹாசன் விளக்கம்!
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ருதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப்படம் லாபம். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து தற்போது அவர் யாமிருக்க பயமே மற்றும் கவலை வேண்டாம் படத்தின் இயக்குனர் DK இயக்கத்தில் உருவாகும் ஒரு த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது காதலருடன் லிவ் இன் உறவில் இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன். ஆனால் அவருக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என விளக்கமளித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அதில் “நான் என்றுமே என் வாழ்க்கையை மறைத்து வைத்ததில்லை. எனக்கு கல்யாணம் ஆனால் அதை வெளிப்படையாகவே செய்வேன்” எனக் கூறியுள்ளார்.