செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:12 IST)

ஆவினில் கோல்ட் காஃபி, பாஸந்தி.. இன்னும் பல..! – ஆகஸ்டு 20 முதல் விற்பனை!

ஆவின் நிறுவனம் பல்வேறு பால் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

விரைவில் தண்ணீர் பாட்டில்கள் விற்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் ஆவினில் பல வகை மில்க் ஷேக்குகள், ஐஸ் க்ரீம்களும் விற்பனையாகின்றன. இந்நிலையில் புதிதாக Cold Coffee, பலாப்பல ஐஸ்க்ரீம், பாஸந்தி உள்ளிட்ட பல உணவு பொருட்களை ஆவின் அறிமுகப்படுத்துகிறது.

ஆகஸ்டு 20ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் நாசர் இந்த பொருட்களை அறிமுகம் செய்கிறார்.