திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (20:17 IST)

பிரச்சாரத்தின் போது பெண் குழந்தைக்கு பெயர் வைத்த முதல்வர் பழனிசாமி!

பிரச்சாரத்தின் போது பெண் குழந்தைக்கு பெயர் வைத்த முதல்வர் பழனிசாமி!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக மற்றும் திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாகி வருகின்றனர் 
 
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அவர் சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த குழந்தையை கையில் தூக்கி கொஞ்சிய முதல்வர் பழனிசாமி அந்த குழந்தைக்கு ஜெயஸ்ரீ என்று பெயர் சூட்டினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.