வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (15:55 IST)

திருமாவளவன் எதிர்காலத்தில் துணை முதல்வர்.. மத்திய அமைச்சரவையில் இடம்: ஆதவ் அர்ஜூனா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதிர்காலத்தில் துணை முதலமைச்சர் ஆவார் என்றும் அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பிக்கள் மத்திய அரசில் அமைச்சர்களாக இடம் பெறுவார்கள் என்றும் சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்ந்த ஆதவ்  அர்ஜுனா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
 தலித் என்பதால் அரசியல் ஆளுமை கிடைக்கக்கூடாது என்ற கருத்து இன்னும் இருக்கிறது என்றும் எங்கள் கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் 2 எம்பிக்கள் இருக்கிறார்கள் என்றும் வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதே எங்கள் கொள்கை என்றும் அவர் பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்
 
மேலும் தமிழக, முழுவதும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்படி கட்சி வளரும் காலத்தில் எதிர்காலத்தில் திருமாவளவன் துணை முதலமைச்சர் ஆவார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் 
 
மத்திய மற்றும் மாநில அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகளின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இருப்பார்கள் என்றும் அதிகாரத்தை நோக்கி விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் வரும்போது குறிப்பிட்ட சமூக மக்களும் வளர முடியும் என்றும் அதற்காகத்தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் ஆதவ்  அர்ஜூனா தெரிவித்துள்ளார்
 
Edited by Siva