ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (07:56 IST)

சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம். ஈவிஎம் மிஷினுக்கு எதிராக திருமாவளவன் போராட்டம்..!

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிப்ரவரி 23ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:


ஈவிஎம் பிரதமர் மோடி. இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'.  செல்லப்பெயர்.

"மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சதிவேலைகளை செய்து மோசடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது.

ஆதலால், சிறுத்தைகள் மீண்டும் களமிறங்குவோம்.

நாட்டைக் காக்க-
நாடாளுமன்ற சனநாயகம் காக்க - தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் காக்க-

சிறுத்தைகள் யாவரும் சினந்தெழுவோம்! - மோடியின் ஈவிஎம் சதி வீழ்த்த  இணைந்தெழுவோம்!

பிப்ரவரி 23 - வெகுண்டெழுவோம்!

Edited by Siva