1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (21:35 IST)

மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்...அதிர்ச்சி சம்பவம்

மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்...அதிர்ச்சி சம்பவம்
வேலூர் திருவலம் பகுதியில் நர்சிங்  கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை கல்லூரிக்குச் செல்வதற்காக திருவலம் பஸ் நிலையத்தில் பேருந்திற்காக மாணவி காத்திருந்தார். அப்போது, அவரிடம் வந்த சதீஸ்குமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கழுத்தில் குத்தினார். அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.   தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சைய பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.