புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (08:29 IST)

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி: கள்ளக்காதலனின் வெறிச்செயல்

மதுரையில் கள்ளக்காதலி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கள்ளக்காதலன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தான்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார்.
 
இதற்கிடையே ஜோதிக்கும் பெரியசாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜோதி பெரியசாமியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
 
இந்நிலையில் ஆடு மேய்க்க சென்ற ஜோதியிடம் பெரியசாமி தனது ஆசைக்கு இணங்கும்படி கேட்டுள்ளார். இதற்கு ஜோதி மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியசாமி ஜோதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
 
இதனையறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தலைமறைவாக இருந்த பெரியசாமியை கைது செய்த போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.